மிகவும் சூடான பானங்கள் புற்று நோய்க்கு வழிவகுக்கும்: ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பானங்களை மிகவும் சூடாக அருந்தினால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்ட வாய்ப்புள் ளது என ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காபியை மிதமான சூட்டில் அருந்தினாலும் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சத்தை அது நிராகரித்துள்ளது.

இதுகுறித்து புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் (ஐஏஆர்சி) இயக்குநர் கிறிஸ்டோபர் வைல்டு கூறும்போது, “உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கு மிகவும் சூடான பானங்களை அருந்துவதும் ஒரு காரணம். இதற்கு பானங்கள் காரணமல்ல. அதன் அதிக வெப்பநிலைதான் காரணம்” என்றார்.

இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளை ஐஏஆர்சி ஆராய்ந்தது. இவை அனைத்தும், காபி மற்றும் தென் அமெரிக்காவின் பிரபல மூலிகை பானமாக ‘மேட்’ ஆகியவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டவை.

இவ்விரு பானங்களால் புற்று நோய் ஏற்பட வாய்ப்பில்லை. என்றாலும் எந்தவொரு பானத்தை யும் 65 டிகிரி செல்சியஸ் (150 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலைக்கு மேல் அருந்தினால் உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படலாம் என்று ஐஏஆர்சி கூறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்