எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாத வடகொரியா: அதிபர் கிம் தலைமையில் மீண்டும் ஏவுகணை சோதனை

By பிடிஐ

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனை வெற்றியை பியாங்யாங் அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என்றும் உடனடியாக அந்த ரக ஏவுகணை ராணுவத்தில் இணைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறும்போது, "புக்குக்சோங்-2 என்ற ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 500 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது" எனத் தெரிவித்துள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனையை தென் கொரியாவும் உறுதி செய்துள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்னதாகத்தான் வடகொரியா ஹவாசாங் என்ற ஏவுகணையைச் சோதனை செய்தது. 800 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை அணுஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. தற்போது, மீண்டும் ஒரு சோதனை செய்துள்ளது.

வடகொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா. பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. அமெரிகாவும் அவ்வப்போது வடகொரியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது.

ஆனால் ஐ.நா., அமெரிக்கா, சீனா இன்னும் பிற நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்