ராணுவ நடவடிக்கைகளில் 910 பயங்கரவாதிகள் பலி; 81 வீரர்கள் உயிரிழப்பு- பாகிஸ்தான் தகவல்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் பயங்கரவாததிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் 910 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 82 ராணுவ வீரர்களை இழந்ததாகவும் அந்நாட்டு ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் பதுங்கி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கும் வகையில் 910 பேரை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு வஜிரிஸ்தானின் முக்கிய நகரங்களான மீரான் ஷா, மீர் அலி, தத்தா கேல், போயா, மற்றும் டெகான், ஆகிய நகரங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ராணுவ முயற்சியால் பாகிஸ்தான், ஆப்கானில் நடத்த திட்டமிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் சதிகள் முறியடிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, ஜூன் மாதத்திற்கு பின் மட்டும், 2,274 புலனாய்வு ஆபரேஷன்களை மேற்கொண்டதில், 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 114 பேர் சிறை பிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்