சிரிய கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா பாதுகாக்கிறது: ரஷ்யா

By செய்திப்பிரிவு

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகள் அமெரிக்கப் படைகளால் பாதுகாக்கப்படுவதாக ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின்றன.

ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா, இட்லிப் ஆகிய பகுதிகளில் ரஷ்யா - சிரிய கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிரிய கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நெருங்கவிடாமல் அமெரிக்கா பாதுகாப்பு அளிப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

இதுகுறித்து ரஷ்யா தரப்பில் கூறும்போது, "சிரியாவில் கிளர்ச்சியாளர்களின்

 கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி முன்னோக்கி செல்லும்போது கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளிக்கின்றன. அதையும் மீறி ரஷ்யா முன்னோக்கி நகர்தால் ஆபத்து அமெரிக்க படைகளுக்குத்தான் ஏற்படும்.

எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா பதிலடி அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்