உலக மசாலா: அம்மா தேவை

By செய்திப்பிரிவு

ஜார்ஜ் என்று பெயரிடப்பட்ட கோல்ட்ஃபிஷ் கொஞ்ச நாட்களாகச் சரியாகப் சாப்பிடுவதில்லை; நீந்துவதில்லை. மெல்பர்னில் உள்ள விலங்குகள் மருத்துவமனைக்கு ஜார்ஜ் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே அனஸ்தீஸியா கொடுத்து, வெற்றிகரமாக மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார் டாக்டர் ரிச். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜார்ஜ் நலமாக இருக்கிறது. கோல்ட்ஃபிஷ் ஆயுள் காலம் சுமார் 30 ஆண்டுகள். 10 வயதான ஜார்ஜ், இன்னும் 20 ஆண்டுகள் நலமுடன் வாழும் என்கிறார் டாக்டர் ரிச்!

மருத்துவ அறிவியல் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கு!

தாய் அன்புக்கு ஏங்காதவர்கள் இருக்க முடியுமா? 30 வயதான க்வான் இன் சூய், சீனாவில் உள்ள சிச்சுவான் பகுதியில் வசிக்கிறார். தனக்கு அம்மாவாக இருக்கச் சம்மதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்கிறார். அம்மாவுக்கு குறைந்தது 57 வயதாகியிருக்க வேண்டும், நன்றாகப் படித்திருக்க வேண்டும், எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக்கூடாது என்பதுதான் க்வானின் எளிய விருப்பங்கள்! “ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த நான், இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் அம்மாவின் அன்பு கிடைக்காதது பெரிய வருத்தத்தைத் தருகிறது. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு’’ என்கிறார் க்வான்.

உங்களுக்கு ஏற்ற அம்மா சீக்கிரம் கிடைச்சிடுவாங்க!

பிலடெல்பியாவில் காணாமல் போன நாய், ஐந்து மாதங்களுக்குப் பிறகு போர்ட்லாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாய் சுமார் 3000 மைல்களை எப்படிக் கடந்து வந்தது என்று எல்லோரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். நாயிடம் இருந்த மைக்ரோ சிப் மூலம் நாயின் சொந்தக்காரர் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. போர்ட்லாண்டில் இருந்து பிலடெல்பியாவுக்கு விமானத்தில் செல்ல நாய்க்குப் பணம் தேவைப்பட்டிருக்கிறது. தகவல் அறிந்தவுடன் பலரும் தாராளமாகப் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்!

மனுசங்களுக்குக் கூட உதவாத இந்தக் காலத்தில், நாய்க்கு உதவும் நெஞ்சங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்