ஈரான் மூத்த தலைவர் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

By செய்திப்பிரிவு

ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திங்கட்கிழமை கையெழுத்திட்டார்.

இதுகுறித்து ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் பேசும்போது, ''இந்தப் பொருளாதாரத் தடை ஈரானின் மோசமான தொடர் நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் மூத்த தலைவர் ஈரான் அரசின் நடவடிக்கைக்கு பொறுப்பானவர்'' என்று பதிலளித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்ததால் போரில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியாக இருப்பதாக ஈரான் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியது.

கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இப்படி தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துவந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்