பாலஸ்தீனர்கள் தங்களை ஆளுவதற்கான தகுதியை அடைந்திருக்கிறார்களா? குஷ்னர் பதில்

By செய்திப்பிரிவு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பிரச்சினை  நிலவி வரும் சூழ்நிலையில் பாலஸ்தீனர்கள் தங்களை ஆளுவதற்கான தகுதியை அடைந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் குஷ்னர் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின்  மருமகனும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான குஷ்னரிடம் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்த பேட்டியில், இஸ்ரேலின் தலையீடு இல்லாமல் பாலஸ்தீனர்கள் ஆள்வதற்கான தகுதியுடையவர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு குஷ்னர் பதிலளிக்கும்போது, “அதனை நாம் பார்க்க வேண்டும். காலப்போக்கில் அவர்களுக்கு ஆளும் திறன் வந்துவிடும் என்று நம்புகிறேன். ஒரு நியாயமான நீதி அமைப்பு வேண்டும். அங்கு பத்திரிகை சுதந்திரம் வேண்டும். அனைத்து மதங்களுக்கும் சகிப்புத்தன்மை வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்