மக்களுக்கான உணவைத் தடுக்கும் ஏமன் கிளர்ச்சியாளர்கள்: ஐ.நா. குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களுக்கான உணவு வழங்கும் பாதையை அடைத்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு, ''ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவளிக்கவிடாமல் தடுக்கிறது'' என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

29 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்