அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் அதிபர் மனைவிக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக இஸ்ரேலின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மனைவிக்கு 15,000 டாலர் அபராதம் விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் மனைவி சாரா நெதன்யாகு. இவர் அதிபர் இல்லத்தில் சமைப்பதற்கு யாரும் இல்லை என்று கூறி சுமார் 99,300 டாலர்களை அரசு நிதியிலிருந்து தவறுதலாகப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கடந்த வருடம் குற்றன் சாட்டப்பட்டார்.

இந்நிலையில், தன் மீதான குற்றத்தை சாரா ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 15,000 டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாரா நெதன்யாகுவின் வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து கூறும்போது, ”இதில் சாராவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் பிம்பத்தை கீழிறக்குவதற்கான முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

32 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

30 mins ago

சினிமா

48 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

42 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

56 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்