அமைதிப் பேச்சில் பங்கேற்க தலிபான்களுக்கு ஐ.நா. அறிவுரை

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன் சில் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, அங்கு தலிபான்களின் ஆட்சியை அகற்றியது. அதன்படி ஆப்கானிஸ்தான் அரசு படைக்கும் தலிபான்களுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும் ஒரு பங்கு தலிபான்களின் வசமும் உள்ளன.

இந்தப் பின்னணியில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அண்மையில் ஓர் அரசியல் தீர்வு திட்டத்தை வெளியிட்டார். ஆயுதங்களைக் கைவிட்டால் தலிபான் அமைப்பை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அறிவித்தார். ஆனால் தலிபான்கள் தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் காரல் ஜன் கஸ்டப் வான் ஓஸ்டோரம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் அந்த அமைப்பு நிபந்தனையற்ற வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஆப்கனில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்