இலங்கை பிரதமர் ரணில் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு

By பிடிஐ

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே (68) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் போவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எம்பி ரஞ்சித் சோய்சா கூறும்போது, “அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளோம். இதுதொடர்பான கோரிக்கையை சபாநாயகரிடம் வழங்க உள்ளோம். தீர்மானத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட உள்ள னர்.

இந்தத் தீர்மானத்தில், கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை ரணில் தவறாக நிர்வாகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும். குறிப்பாக, 2015 மற்றும் 2016-ல் மத்திய வங்கி பத்திர (பாண்ட்) வெளியீட்டில் நடைபெற்ற ஊழல் உள்ளிட்ட மிக முக்கிய குற்றச்சாட்டுகள் இடம்பெறும்” என்றார்.

இதுகுறித்து ராஜபக்ச செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு விரைவில் கவிழும். அதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்