பிராந்தியத்தில் அமெரிக்காதான் பதற்றத்தை ஏற்படுத்துகிறது: ஈரான்

By செய்திப்பிரிவு

அமெரிக்காதான் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை  நாங்கள் அவர்கள் அணுஆயுதங்களை உபயோகிக்கக் கூடாது என்றுதான் விரும்புகிறோம் என்று ஜப்பான் சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் பதிலளிக்கும்போது,”அமெரிக்கா கூறுவதுபோல்  ஈரான் அணுஆயுதங்களை எதிர்பார்க்கவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் தங்களுடைய ராணுவ இருப்பின் மூலம் அமெரிக்காதான் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஈரான் மக்களை துன்புறுத்தியது ” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப்  ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்