மீண்டும் இந்தோனேசியா அதிபர் ஆனார் விடோடோ

By பிடிஐ

இந்தோனேசியாவில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 55.5 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இந்தோனேசிய ஜனநாயக போராட்டக் கட்சி வேட்பாளர். ஜோகோ விடோடோ.

இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிராபோவோ சுபியண்டோவுக்கு 44.5 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் இரண்டாவது முறையாக இந்தோனேசிய அதிபராக விடோடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்தத் தோல்வியை ஏற்கவில்லை என்றும் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் பிராபோவோ குற்றம்சாட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும்போது அதில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற இருந்ததாக சந்தேகத்தின் பேரில் 31 ஐஎஸ் தீவிரவாதிகளை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜகார்த்தாவிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தூதரகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்துட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 min ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்