அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சீன, அமெரிக்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ''சீனா- அமெரிக்கா இடையே நான்கு வாரங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட நாளில்  சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து ஒப்பந்தம் ஏற்படும்'' என்றார்.

அமெரிக்கா - சீனா உறவில் ஆரோக்கியமான, நிலையான வளர்ச்சியையே சீன அதிபர் ஜி ஜின்பிங்  நம்புவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர்வரை 4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு எடுத்திருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தது.

இந்நிலையில் அமெரிக்கா – சீனாவுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வர்த்தகப் போர், சர்வதேச அளவில் விரிவடைந்துவிடுமோ என்று அஞ்சிய நிலையில், நிலைமை தற்போது சீராகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்