ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மாட்டோம்: அயத்துல்லா அலி காமெனி

By செய்திப்பிரிவு

ஜிஹாதி இஸ்லாமிய அமைப்பான ஐ.எஸ்.-க்கு எதிராக அமெரிக்காவுடன் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம் என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக இன்று தெரிவித்தார்.

"தொடக்கம் முதலே இராக்கில் உள்ள தூதர் மூலம் ஐ.எஸ். -க்கு எதிராக ஒத்துழைப்பு வழங்க முடியுமா என்று ஈரானைக் கேட்டு வருகிறது அமெரிக்கா. நான் ‘ஒரு போதும் இல்லை’ என்றேன்... காரணம் அவர்கள் கைகள் கறை படிந்த கைகள்.

அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஈரானின் ஜவாத் ஜரீஃபிடம் இது பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டுள்ளார். ஆனால் அவர் நேரடியாக நிராகரித்து விட்டார்.

பாகிஸ்தானில் தங்கள் இஷ்டப்படி குண்டுகளை வீச எப்படி சுய அதிகாரத்தை அமெரிக்கா வழங்கிக் கொண்டதோ அதே போல் இராக், சிரியாவிலும் செய்ய நினைக்கின்றனர்” என்று அவரது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

வணிகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்