சிரியாவிலிருந்து வெளியேற அழுத்தம் தரப்படவில்லை: அமெரிக்க ராணுவம்

By செய்திப்பிரிவு

சிரியாவிலிருந்து  நாங்கள் வெளியேற வேண்டும் என்று  எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைகளை மேற்பார்வையிடும் படை தலைவர் ஜோசப் கூறும்போது, “ சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள்  இந்தக் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்ற எந்த அழுத்தமும் எங்களுக்கு தரப்படவில்லை.  ஐஎஸ் -யை தோல்வியடைய செய்து வெளியேறுவது எங்கள் இலக்கு. இதில் எங்களது படையின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த உள்நாட்டுப் போரில்  குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி சண்டையிட்டது .

இந்நிலையில் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். ஐஎஸ் தீவிரவாதிகளைத் தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும்'' என்று அறிவித்தார்.

இதற்கு பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்