தனக்காக வாதாடும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு கொலைக் குற்றவாளி

By செய்திப்பிரிவு

50 பேரின் மரணத்துக்குக் காரணமான கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளி தனக்குத் தானே வாதாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி பிரெண்டன் டாரன்டுக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் கூறும்போது, ''டாரண்ட்  மனதளவில் தடுமாறி இருக்கிறார். அவர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது  அவர்  பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருக்கிறார்'' என்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தானே வாதாட டாரண்ட் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நேர்ந்தால் அவர் தீவிரவாதக் கருத்துகளை தனது வாதத்தின் மூலம் பரப்புவார் என்று அச்சம் எழுந்துள்ளது.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில்  50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள்.

ஏராளமானவர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

வலைஞர் பக்கம்

47 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்