மலாவியில் காட்டுவெள்ளம்: 23 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு

By ஏஎஃப்பி

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் காட்டுவெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடும் மழையினால் ஏற்பட்ட காட்டு வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஊர்ப்பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால்  11 பேர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மலாவி நாட்டில் தற்போதைய எண்ணிக்கையின்படி 1 லட்சத்து 10 ஆயிரம் பேர்கள் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நாட்டின் தென் பகுதியில் உள்ள பன்னிரெண்டு மாவட்டங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால் நாட்டின் கணிசமான பகுதிகளில் பெரும்சேதாரங்கள் ஏற்பட்டுவருகின்றன.

வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் மக்களை மீட்கவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் மலாவி பாதுகாப்புப் படையும் காவல் தேடுதல் மற்றும் மீட்புக்குழுக்களும் மலாவி செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

இதுகுறித்து ஏஎப்பியிடம் பேசிய ஆணையர் சார்லஸ் மகாங்கா தெரிவித்ததாவது:

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு இதற்கென்று முலாஞ்சே மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுவருகின்றனர். தொடர்ந்து

பெய்துவரும் கனத்த மழையினால் இரண்டு பெரிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பிளாண்டயருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்தவாரம் வரை இந்த கனத்த மழைப்பொழிவு தொடரும் என நாட்டின் தலைமை வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு சார்லஸ் மகாங்கா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்