சிரியாவில் இறுதிப் போர்: ஐஎஸ் பிடியில் சிக்கிய 200 குடும்பங்கள்

By செய்திப்பிரிவு

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் 200 குடும்பங்களைப் பிடித்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரி மிச்செல்லா கூறும்போது, ''சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் 200 குடும்பங்களை வெளியேற விடாமல் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை 10க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து பொதுமக்கள் ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டனர்.

இந்த வாரம் மட்டும் 20 ஆயிரம் பேர் ஐஎஸ் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் சில குடும்பங்களை வரவிடமால் ஐஎஸ் தீவிரவாதிகள் தடுத்துள்ளனர்'' என்றார்.

கடந்த திங்கட்கிழமை இட்லிப் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.  இந்தத் தாக்குதலில் 51 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், , ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த  நிலையில் ஐஎஸ் வசமுள்ள மற்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்