இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, சூழலை சுமுகமாக்க வேண்டும்: ஜப்பான் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இந்தியா - பாக் இடையில் பதற்றமான நிலை நிலவும் நேரத்தில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, சூழலை சுமுகமாக்க வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.

போர் சூழலை விடுத்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வெளிநாடுகள் கோரி வருகின்றன. இதுகுறித்துப் பேசிய ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தரோ கொனோ, ''காஷ்மீரின் அபாயகரமான நிலை கவலை அளிக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதற்கு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ் இ முகமது பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தானிடம் வலியுறுத்துகிறோம். பிப்ரவரி 26-ல் (பாலகோட் தாக்குதல்) இருந்து இந்திய விமானப் படைக்கும் பாகிஸ்தானிய விமானப் படைக்கும் இடையில் பதற்றம் உருவாகியுள்ளது.

 

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் சூழ்நிலையை சுமுகமாக்க வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்துகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 mins ago

சினிமா

7 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

20 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்