சீனா சென்றார் சவுதி இளவரசர் சல்மான்

By செய்திப்பிரிவு

இந்திய சுற்றுப்பயணத்தை முடிந்துக் கொண்ட சவுதி இளவரசர் வியாழக்கிழமை சீனா சென்றடைந்தார்.

பத்திரிகையாளர் ஜமாலின் கொலையால் பெரும் விமர்சனதுக்குள்ளான சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இதனையொட்டி இந்த வாரம் பாகிஸ்தான் சென்ற சல்மான்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான  சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் டாலர் மதிப்பிலான  பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக தெரிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து இந்தியா சென்றார் சல்மான்.

இந்த நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு  நாள் பயணமாக  சீனா சென்றடைந்தார்.

சவுதி இளவரசரின் சீன சுற்றுப்பயணம் குறித்து சவுதி அமைச்சர் காலித் சீனாவின் அரசு ஊடகமான சினுவாவில் பேசும்போது, “ சவுதி அரேபியாவிடம்  உள்ள மூலதனங்களை லாபகரமான இடங்களில் பயன்படுத்த வேண்டும். சீனா முதலீடு செய்வதற்கு சிறந்த இடம்” என்றார்.

சல்மானின் இந்தப் பயணம் இரு நாட்டின்  பொருளாதார உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப்படும் என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்