அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 போலீஸார் காயம்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் ஹூஸ்டன்  நகரில் குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸார் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஹூஸ்டன்  நகர போலீஸார் தரப்பில், ''அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸார் காயமடைந்தனர்.அவர்களில் 2 பேரின்  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்த தகவல் ஏதும் இதுவரை  கண்டறியப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்து  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டெனர் மருத்துவமனைக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போலீஸாரைச் சந்தித்து  நலம் விசாரித்தார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போலீஸார் மீது நடத்தப்பட்ட முதல் துப்பாக்கிச் சூடு சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

36 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்