சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு  நான்கு  வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''சீனாவின் தடை செய்யப்பட்ட ஃபலுன் கனக் அமைப்பினைப் பின் தொடர்பவரும் மற்றும் சீனாவில் நில அபகரிப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான பிரபல மனித உரிமை வழக்கறிஞரான வாங் குவன்சாங் (42) நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டிலும் வாங் சமூக ஆர்வலருடனும் போராட்ட நிகழ்வு ஒன்றில் கைது செய்யப்பட்டிருக்கிறார்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனை குறித்து டியாஜின் நகர நீதிமன்றம் அரசு அதிகாரத்தை உடைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வாங் குவன்சாங்குக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் அரசு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது'' என்று தீர்பளித்துள்ளது.

வாங்குக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு  அநீதி என்று சீனாவின் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் சீனாவில் வழக்கறிஞர்களின் உரிமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் சமீபத்திய தாக்குதலையும் அவர்கள் கண்டித்துள்ளன.

வாங் கடந்த ஒரு வருடமாகவே தனது குடும்பத்தைப் பார்க்க விரும்பவில்லை என்றும் கைதுக்குப் பிறகு குடும்பத்தைப் பார்க்க மறுக்கிறார் என்றும் அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட அவர் விரும்பவில்லை எனவும்  ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்