இசையமைப்பாளரை அடித்துக் கொன்ற அமெரிக்க நபர்: சட்டைப்பையில் வைத்திருந்த செல்போனில் பதிவான வீடியோவால் சிக்கிய கொலையாளி

By செய்திப்பிரிவு

ஜேசன் மூடி என்ற இசையமைப்பாளரின் உடலை அமெரிக்க போலீஸார் நவம்பர் மாத சில்லிடும் பனி இரவில் பேங்கோர், மெய்னில் கண்டுபிடித்தனர்.  40 வயதான ஜேசன் மூடி ‘செய்ஸ் த வாட்டிகன்’ குழுவில் இருக்கும் இசையமைப்பாளர் ஆவார். அவர் அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வழிய மயக்கமாகக் கிடந்துள்ளார். 2 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். கண்டபடி தாக்கப்பட்டதால் மூளையில் அடிப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக போலீஸார்  டோனால்ட் கேலெக் என்பவரைக் கைது செய்தனர்.  இதில் இவரிடமிருந்தே இவரது கொலைக்கான ஆதாரத்தை போலீஸார் எடுத்துள்ளனர், ஆனால் தானே தனக்கு உலை வைத்துக் கொண்டதை டோனால்ட் கேலெக் அறியவில்லை.

 

போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், நவம்பர் 11ம் தேதியன்று ஜேசன் மூடியை  பேங்கோர் நகரில் காலெக் சந்தித்துள்ளார். இரவு காலெக்கிற்கும் அவரது பெண் நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட காலெக்கை வெளியேறும்படி ஜேசன் மூடி உத்தரவிட்டுள்ளார். ஜேசன் மூடியே காலெக்கை குடியில்லாத இன்னொரு குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆகவே அவர் அங்கு தங்கலாம் என்று முடிவு எட்டப்பட்டது.

 

இவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதே கொலையாளி காலெக் தன் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் இன்னொரு நண்பருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அந்த நண்பரும் பெண் நண்பர் அவரும் உரையாடலுக்கு ஒப்புக் கொண்டார். இதனையடுத்து செல்பேசி கேமரா வெளிப்புறம் இருக்குமாறு தன் சட்டைப்பயில் வைத்துள்ளார். அதாவது வீடியோ சாட்டிற்கான பொத்தானை தான் அழுத்தியது தெரியாமல் கேமரா வெளிப்புறம் படம் பிடிக்குமாறு தன் சட்டைப்பையில் வைத்திருந்திருக்கிறார்.

 

இதனையடுத்து அந்த பெண் நண்பர் வீடியோவில் காலெக் அருகில் இருந்த மூடி முகத்தின் மீது பயங்கரமாக ஒரு குத்துக் குத்தியதாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளார். அதாவது குடித்து விட்டு தான் நடந்து கொண்டதற்கு ஜேசன் மூடி மன்னிப்புக் கேட்டதாகவும் மன்னிப்பை காலெக் ஏற்க மறுத்து இருமுறை அவரை வலுவாகத் தாக்கியுள்ளார். கீழே விழுந்த ஜேசன் மூடியைப் பிறகு கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி அருகில் உள்ள சுவற்றில் அவர் மண்டையை மோதியுள்ளார். இவற்றையெல்லாம் கேமரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது கொலையாளிக்குத் தெரியவில்லை. மூடி கீழே விழுந்து மூக்கில் ரத்தம் வழிய மயக்கமடைந்த பிறகு சம்பவ இடத்திலிருந்து காலெக் தப்பிவிட்டதாக வீடியோ சாட்டில் இருந்த பெண் சப்ஜாடாக போலீஸில் கக்கி விட்டார்.

 

இருவருக்கும் இடையே பெண் நட்பு தொடர்பாக தகராறு இருந்திருக்கும் போல்தான் தெரிகிறது, இந்நிலையில் தன் பையில் வைத்த செல்போன் வீடியோவே கொலையாளியை அடையாளம் காட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்