இந்தோனேசியாவில் சுனாமி உயிரிழப்பு 429 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் உள்ள சைல்டு எரிமலை கடந்த 23-ம் தேதி இரவு வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் மேற்கு ஜாவா, தெற்கு சுமத்ரா தீவுப் பகுதிகளின் கடற்கரையை தாக்கின. இதன் காரணமாக கடற்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இடிந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து ராணுவம், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பு, சுனாமிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்க 429 ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ நேற்று தெரிவித்தார்.

இறந்தவர்களை அடையாளம் கண்ட உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் காயமடைந்த சுமார் 1,400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 128 பேரை தேடும் பணியும் தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

இந்தியா

56 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்