அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் புகுந்த நபர் கைது: 10 நாளில் 2-வது சம்பவத்தால் அதிர்ச்சி

By ஏஎஃப்பி

அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகைக்குள் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அவரை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர் 11-ம் தேதி இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உலகிலேயே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் உள்ள இடமாக கருதப்படும் வெள்ளை மாளிகைக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழையும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர் உள்ளே புகுந்தபோது அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

வெள்ளை மாளிகை மதில் சுவருக்குள் ஏறி குதித்த அந்த நபர், புல்வெளி பகுதியில் நடந்து சென்று பிரதான கதவு அருகே சென்றுள்ளார். அப்போதுதான் வெளி நபர் ஒருவர் மாளிகை வளாகத்துக்குள் புகுந்தது கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்புப் படையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அந்த நபரிடம் இருந்து ஆயுதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

எனினும் வெடிகுண்டு போன்ற வற்றை மாளிகை வளாகத்தில் அவர் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஊழியர்களில் பெரும் பாலானவர்கள் வெள்ளை மாளிகையில் இருந்து வெளி யேற்றப்பட்டனர். பின்னர் மாளிகை வளாகம் பூட்டப்பட்டு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவது என்பது அரிதான நிகழ்வாகும்.

பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது பெயர் ஒமர் ஜே.கோன்சாலிஸ் (42) என்று தெரியவந்தது. இப்போது அவர் பரிசோதனைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் அவர் எந்த நோக்கத்துடன் வெள்ளை மாளிகைக்குள் வந்தார் என்பது தெரியவில்லை.

கடந்த 11-ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. அவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுப் பிடித்தனர். அவரிடம் முழுமையாக விசாரணை முடியாத நிலையில் மற்றொரு நபர் வெள்ளை மாளிகைக்குள் புகுந்துள்ளது அமெரிக்கா முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா, இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் நிலையில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இதில் தீவிரவாத தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்பு வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகள் அமெரிக்கா வந்து தாக்குதல் நடத்தவே வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவில் இருந்தும் பலர் இராக் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

எனவே ஐஎஸ் தீவிரவாதி களுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு உள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் என்பதால், அமெரிக்காவில் தீவிரவாதி களுக்கு துணைபோகும் நபர்களை கண்டறிந்து வேட்டையாடவும் அமெரிக்க உளவுத் துறை திட்டம் வகுத்து வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்