அமேசான் அலெக்ஸாவைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய பழங்களை ஆர்டர் செய்யும் அதிசயக் கிளி

By செய்திப்பிரிவு

கிளிகள் மிகவும் சாமர்த்தியமானவை, கற்றுக் கொடுத்தால் எதையும் செய்துவிடும் திறமை கொண்டவை என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆப்பிரிக்காவின் ரொக்கோ என்ற ஒரு வகை கிளி தன் முதலாளி குரலைப் போல் பேசி அமேசான் அலெக்ஸாவில் தனக்கு வேண்டிய பழங்கள், காய்கறிகளை ஆர்டர் செய்தது அதிசயிக்க வைத்துள்ளது.

அலெக்ஸா எக்கோ உபகரணம் மூலம் ரகசியமாக தனக்கு வேண்டியவற்றை இந்த ரொக்கோ வகை கிளி ரகசியமாக ஆர்டர் செய்துவந்துள்ளதை கிளியின் முதலாளியே சமீபத்தில்தான் கண்டுபிடித்து அதிசயித்துள்ளார்.

தினமும் அமேசான் அலெக்ஸாவில் பேசி பெரிய ஷாப்பிங் லிஸ்டையே தயார் செய்துள்ளதாம் இந்த விநோதக் கிளி.

ரொக்கோ கிளிக்கு அசாதாரணமான பேச்சு திறன் உள்ளது. ஆனால் இந்தக் கிளியின் இத்தகைய அசாதாரணத் திறமையே அதனை சிக்கலில் கொண்டு மாட்டி விட்டுள்ளது.  இதன் அதீதப் பேச்சினாலேயே பெர்க்‌ஷயரில் உள்ள தேசிய விலங்கு நல அறக்கட்டளை சரணாலயத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காரணம், கிளிப்பேச்சு கேட்கவா என்ற தமிழ் சினிமா ரொமான்டிக் மொழி அல்ல அது. போவோர் வருவோரையெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏசி அதில் மகிழ்ச்சி கண்டுள்ளது இந்த ரொக்கோ கிளி.  இதனாலேயே அதன் இடம் மாற்றப்பட வேண்டியதானதாக பிபிசி ஏற்கெனவே தன் செய்தி ஒன்றில் தெரிவித்திருந்தது.

சரணாலயத்தின் பணியாளர் எவ்வளவோ முயன்றும் அதன் கெட்ட வார்த்தைகளைத் தடுக்க முடியவில்லை. இதனால் பல சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனையடுத்து இந்த ரொக்கோ கிளியை சரணாலய ஊழியர் மரியான் விஷ்நெவ்ஸ்கி என்பவர் கிளியை தத்து எடுத்துக் கொண்டார்.

ரொக்கோவின் இந்த புதிய வீடு, உலகம் அதற்கு மேலும் குஷி ஏற்படுத்த அமேசான் அலெக்ஸாவுடன் நட்பு பூண்டு தனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் ஆர்டர் செய்துள்ளது.  ஐஸ்கிரீம்கள், வாட்டர்மெலான்,  உலர்ந்த திராட்சைகள் என்று ஆர்டர் செய்து வெளுத்துக் கட்டியுள்ளது.  ஒருமுறை லைட் பல்ப், பட்டம் ஆகியவற்றையும் வாங்கியுள்ளதாம்.

சமீபத்தில்தான் அமேசான் அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளியின் உரிமையாளர் இதன் சேட்டைகளைக் கண்டுபிடித்துள்ளார். ஆன்லைன் ஷாப்பிங்குடன் அலெக்ஸாவுக்கே இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து கிங்ஸ் ஆஃப் லியான் இசைக்குழுவின் இசைகளை இசைக்க வைக்கிறதான் ரொக்கோ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

26 mins ago

உலகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

57 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்