‘‘முட்டாள்தனமாக கேள்வி கேட்காதீர்கள்’’ - செய்தியாளர் மீது மீண்டும் கோபத்தை கொட்டிய ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை பத்திரிகையாளர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ட்ரம்ப்.

அப்போது சிஎன்என் செய்தியாளர் அகோஸ்டாவிடம், ''இதோடு போதும்'' என்று ட்ரம்ப் இடைமறித்தார். உடனே வெள்ளை மாளிகையில் இருந்த பெண் உதவியாளர் அகோஸ்டாவிடம் இருந்து மைக்கைப் பறிக்க முயன்றார்.

இதைத் தொடர்ந்து என்பிசி செய்தியாளர் பீட்டர் அலெக்ஸாண்டர், அகோஸ்டாவுக்கு ஆதரவாகப் பேச முயன்றார். அவரையும் இடைமறித்த ட்ரம்ப், ''நீங்கள் முரட்டுத்தனமான, கொடூரமான நபர்'' என்று சாடினார். இதைத் தொடர்ந்து அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் ஒரு செய்தியாளரிடம் அதிபர் ட்ரம்ப் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் புறப்படும் முன் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சிஎன்என் செய்தியாளர் ரப்ரில், அட்டர்னி ஜெனரல் ராஜினாமா குறித்து ட்ரம்பிடம் கேள்வி கேட்டார்.

உடனே ‘‘என்ன இது முட்டாள்தனமான கேள்வி. நான் உங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். நீங்கள் இதுபோன்ற முட்டாள்தனமான கேள்வியை அதிகம் கேட்டுவீட்டீர்கள். மீண்டும் அதையே கேட்க வேண்டாம்’’ என ட்ரம்ப் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்