ஆப்கனில் மீண்டும் வலிமை பெறும் தலிபான்கள்: அமெரிக்கா கவலை

By செய்திப்பிரிவு

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா வெயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆப்கன் மறுபரீசலனை அமைப்பின் அதிகாரிகள் தரப்பில் அறிக்கை ஒன்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில்  ”தலிபான்கள் ஆப்கனில்  பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆப்கனில் வெறும் 55% சதவீதம் மட்டுமே அரசுக்  கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு 75%  இடங்கள் ஆப்கன் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. சமீப ஆண்டுகளில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆதிக்கம்

2001-ல் ஆப்கனில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்துள்ளது இதுவே முதல் முறை.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

36 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்