ஜமால் விவகாரம்; நடவடிக்கை எடுத்தால் தயாராக இருங்கள்: சவுதி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மாயமான பத்திரிகையாளர் ஜமால் விவகாரம் தொடர்பாக சவுதிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அந்நாடு பதிலளித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.

இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இந்த சூழலில் இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று எச்சரித்தார்.

மேலும், சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றைப் புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜமால் விவகாரம் தொடர்பாக எழும் மிரட்டல்களுக்கு சவுதி பதிலளித்ததுள்ளது.

 இதுகுறித்து சவுதி தரப்பில், ”பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் அழுத்தம்,  பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் எங்களை கீழே இறக்கும் முயற்சிகளை  நாங்கள் நிராகரிக்கிறோம். எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை விடப் பெரிதான நடவடிக்கைக்கு உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் சவுதி வலிமையான இடத்தில் இருக்கிறது” என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

22 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

30 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்