ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான்

By செய்திப்பிரிவு

ஈரானில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசும்போது, “தற்போதுள்ள அமெரிக்க அரசு ஈரானுடன் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விரோதத்தை கடைப்பிடிக்கிறது.

ஒருவர் மட்டும் எதிரியாக இருந்துக் கொண்டு மிதமுள்ளவர்கள் அவரை வழி நடத்திய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தற்போது மோசமான அனைவரும் இணைந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கா ஈரானில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறது. அமெரிக்காவால் ஈரான் ஏற்றுமதியை பூஜ்ஜயமாக குறைக்க இயலாது. எண்ணெய் தேவையை ஈரானுக்கு பதில் சவுதி ஈடுசெய்யும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால் ஈரானின் எண்ணெய் தற்போது 80 டாலைரை எட்டியுள்ளது. 

ஏற்றுமதியில் ஈரான் முன்னர் எந்த அளவு வருமானம் ஈட்டியதோ அதே அளவு வருமானத்தை தற்போதும் பெறுகிறது” என்றார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஈரானின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெயை  பிற நாடுகள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்