சீனாவில் முஸ்லிம்களின் போராட்டத்தால் மசூதியை இடிப்பது ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சீனாவில் ஹூய் இன முஸ்லிம்களின் போராட்டத்தால், மசூதியை இடிக்கும் திட்டத்தை உள்ளூர் அரசு நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது.

சீனாவின் வடமேற்கில் உள்ளது நிங்ஜியா மண்டலம். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். இங்குள்ள டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் வாழ் கின்றனர்.

இந்நிலையில், வெய்ஸு பகுதியில் ஏற்கெனவே இருந்த மசூதியை இடித்து விட்டு புதிதாக மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டதாகக் கூறி கடந்த 3-ம் தேதி மசூதி நிர்வாகத் துக்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில், 10-ம் தேதிக்குள் மசூதியை இடிக்க வேண்டும். மீறினால், மசூதியை அரசே அப்புறப்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மசூதியை இடிக்க அரசு அதிகாரிகள் வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ஹூய் முஸ்லிம்கள் மசூதியை சூழ்ந்துகொண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பிற்பகல் முதல் விடிய விடிய அவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் போராட்டத்தால், மசூதியை இடிக்கும் திட்டத்தை அரசு அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

இதற்கிடையில், நிங்ஜியா அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘மசூதி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், மசூதியின் 8 கோபுரங்களை மட்டும் அகற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது’’ என்று தெரிவித்தனர். எனினும், கோபுரங் களை இடிக்க முஸ்லிம்கள் விரும்பவில்லை.

முஸ்லிம்கள் கூறும்போது, ‘‘மசூதி கட்டும் பணி 2 ஆண்டு களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. அதுவரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர். மசூதியை கட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறினால், அப்போதே கட்டுமானத்தை நிறுத்தி இருக்கலாமே’’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு இருப்பதால், அங்கு இஸ்லாமிய மயமாக்கம் மற்றும் அரபு மய மாக்கத்தை ஒடுக்க அரசு நினைக் கிறது என்றும் சிறுபான்மை யினரை சீன கலாச்சாரத்துக்கு மாற்ற அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்