அமெரிக்கக் கொடிக்கு தவறாக வண்ணமிட்ட ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

அமெரிக்கா தேசியக் கொடிக்கு தவறாக வண்ணமிட்டதற்காக  அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ்  நகரில் உள்ள  குழந்தைகள் மருத்துவமனைக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானிய ட்ரம்ப்பும் சென்றிருந்தனர்.

அப்போது குழந்தைகளுடன் சேர்த்து ட்ரம்ப் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்டார். அதில் ட்ரம்ப் அமெரிக்கக் கொடியை தவறாக வரைந்ததுதான் விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.

அமெரிக்க தேசியக் கொடியைப் பொறுத்தவரை அதில் சிவப்பு வெள்ளை நிறக் கோடுகள் இருக்கும். ஆனால் ட்ரம்ப் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களை வண்ணமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் ட்ரம்ப்பை விமர்சித்து வருகின்றனர்.

ட்ரம்ப்புக்கு அமெரிக்க தேசியக் கொடி எப்படி இருக்கும் என்று கூடத் தெரியவில்லை. ஆனால் அவர் அமெரிக்க மக்களை தேசப்பற்று சார்ந்து விமர்சிக்கத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

ட்ரம்ப் வரைந்ததாகக் கூறப்படும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்