மீட்பு குழுவினரை சிறப்பித்த தாய்லாந்து கலைஞர்கள்

By செய்திப்பிரிவு

தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்து சிறுவர் அணியை மீட்ட  மீட்பு  குழுவினரை அந்நாட்டு உள்ளூர் கலைஞர்கள் ஓவியங்கள் மூலம் கவுரப்படுத்தியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்தக் குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த ஜூன் 23-ம் தேதி இந்தக் குகைக்குச் சென்றனர்.

இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் 18 நாட்கள் போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தாய்லாந்து கால்பந்து அணியை மீட்ட மீட்பு குழுவை சிறப்பிக்கும் வகையில்,  அந்நாட்டு உள்ளூர் கலைஞர்கள் மீட்புப் பணி குழுவினரை சுவர்களில் சித்திரங்களாக வரைந்து கவுரப்படுத்தியுள்ளனர்.

இந்த சுவரோவியங்களில் மீட்புப் பணியின்போது உயிரிழந்த சமான் குனான்னை சிறப்பான இடம் அளிக்கப்படுட்டுள்ளது. மற்றும்  இவருக்கு குட்டி சிலையையும் கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த சுவரோவியங்கள் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலுள்ள தனியார் கலைக் கூடமான ஆர்ட் பிரிட்ஜ்ஜில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்