அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அமெரிக்க போலீஸ் தரப்பில், "அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள கேபிட்டல் கெஜட் செய்தி பத்திரிக்கை, அலுவலகத்தில் வியாழக்கிழமை நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்” என்று கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சில மணி நேரங்களிலே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்து உள்ளனர். அவரின் பெயர் ஜெராட் ரம்மோஸ் என்று அவரின் புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளனர்.

ஜெராட்டுக்கும், கேப்பைடல் கெஜட் பத்திரிக்கை ஊழியர்களுக்கு ஏதேனும் முன்விரோதப் போக்கு உள்ளதா? என்று போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ஜெராட்டுக்கு கேபிட்டல் கெஜட் பத்திரிக்கைக்கும்  நீண்ட பகைமை வரலாறு இருந்ததகாவும், இதன் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேப்பிட்டல் கெஜட் பத்திரிக்கை 100 வருடங்களுக்கு மேலாக மேரிலாண்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை நிறுவனத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்க  மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

22 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

வலைஞர் பக்கம்

34 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

44 mins ago

மேலும்