2 வடகொரியர் கடல்வழியாக தென்கொரியா தப்பி ஓட்டம்

By செய்திப்பிரிவு

ராணுவ அதிகாரி உட்பட வடகொரியாவைச் சேர்ந்த 2 பேர் கடல் வழியாக நேற்று தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றனர்.

இரு நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள தென்கொரியாவின் பாங்யாங் தீவு பகுதியில் ஒரு சிறிய படகு தென்பட்டதாக யான்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவிலிருந்து வந்த அந்தப் படகில் அந்நாட்டின் மேஜர் அந்தஸ்து உடைய ஒரு ராணுவ அதிகாரியும், பொதுமக்களில் ஒருவர் என 2 பேர் இருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கொரிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாட்டு அதிபர்களும் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பின்போது, அணு ஆயுத தயாரிப்பை கைவிடவும் கொரிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2000-வது ஆண்டு முதல், வடகொரிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தென்கொரியா தப்பிச் சென்றது 14-வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு வடகொரிய ராணு அதிகாரி ஒருவர் தென்கொரியா தப்பினார்.

இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரியர்கள் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், மிகவும் பாதுகாப்பு மிக்க எல்லைப் பகுதியைக் கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்