ரசாயன தாக்குதல்: சிரியா, ரஷ்யா, ஈரான் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் - ட்ரம்ப் எச்சரிக்கை

By ஏஎஃப்பி

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு சிரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யா மற்றும் ஈரான் உதவியுடன் ரசாயன தாக்குதல் நடந்துள்ளதாகவும் இதில் 49 பேர் பலியாகியுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரசாயன தாக்குதலில் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ஒயிட் ஹெல்மெட் தன்னார்வ அமைப்புகள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலை அமெரிக்க ட்ரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் இறந்திருகிறார்கள்.

மிருக தன்மை கொண்ட ஆசாத்துக்கு உதவியதற்காக ரஷ்யாவும், ஈரானும் மிகப் பெரிய விலையை கொடுக்க  வேண்டிய  சூழல் ஏற்படும்” எனறு பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்