ஆஸ்திரேலிய கடற்படையின் கப்பல்களை வழிமறித்த சீனா

By செய்திப்பிரிவு

தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்களை சீனா வழிமறித்துள்ளது.

தென்சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 2 போர்க் கப்பல்கள், ஒரு எண் ணெய் கப்பல் வியட்நாமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த 3 கப்பல்களையும் சீன கடற்படையின் போர்க் கப்பல்கள் வழிமறித்துள்ளன. எந்த இடத்தில் இந்த மோதல் நடைபெற்றது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியபோது, ‘‘தென்சீனக் கடலின் சர்வதேச எல்லை பகுதியில் பயணம் செய்ய எங்களுக்கு முழுஉரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று கப்பல்களும் பத்திரமாக வியட்நாம் சென்றுள்ளன. தென்சீனக் கடலின் சர்வதேச எல்லையில் ஆஸ்திரேலிய போர்க் கப்பல்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடும். எத்தகைய அச்சுறுத்தல்களும் அஞ்ச மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலில் அமெரிக்க போர்க் கப்பல்களும் முகாமிட்டுள்ளன. ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களை சீனா வழிமறித்த சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்க போர்க்கப்பல்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அந்த கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்