இந்தியருக்கு அடுத்த ஜாக்பாட்: துபாய் லாட்டரி குலுக்கலில் ரூ.6.4 கோடி பரிசு

By பிடிஐ

துபாயில் லாட்டரி குலுக்கலில் இந்தியரான பெங்களூரைச் சேர்ந்தவருக்கு ரூ.6.4 கோடி பரிசு கிடைத்துள்ளது.

சமீபத்தில் அபுதாபியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு முறையே ரூ. 21 கோடியும், ரூ.17 கோடியும் பரிசு கிடைத்தது. இந்நிலையில், துபாயில் இந்தியருக்கு இப்போது பரிசு கிடைத்துள்ளது.

இதன்மூலம் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து துபாய் லாட்டரியில் பரிசு பெற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது

ஐக்கிர அரபு அமீகரம் நாட்டில் உள்ள துபாய் நகரில் வரியில்லா லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. துபாயில் உள்ள தனியார் பேக்கேஜிங் நிறுவனத்தில் பெங்களூரைச் சேர்ந்த டாம்ஸ் அரக்கல் மணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 34-வது திருமண நாளின்போது, துபாய் விமான நிலையத்தில் மணி, இந்த லாட்டரி டிக்கெட்டை விலைக்கு வாங்கியுள்ளார். 263 சீரிஸில் 2190 எண் கொண்ட இந்த லாட்டரிக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த லாட்டரியின் பரிசுத் தொகை ரூ.6.4 கோடி (10 லட்சம் அமெரிக்க டாலர்) ஆகும்.

இந்தப் பரிசு குறித்து மணி கூறுகையில், ''நான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது என்று அறிந்தவுடன் என்னால் பேச முடியவில்லை. எனக்கு 10 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.6 கோடி என்பதை நம்ப முடியவில்லை. என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒளி ஏற்றி வைத்த துபாய் லாட்டரிக்கு நன்றி'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்