உலக மசாலா: இனி உரிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

By செய்திப்பிரிவு

ப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ‘மோங்கே’ என்ற இந்த வாழைப்பழம், மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது என்பதுடன், இதன் தோலையும் சாப்பிடமுடியும். சாதாரண வாழைப்பழங்களில் தோலில் கசப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிகக் குறைவான கசப்புடனும் காணப்படுகிறது. நூறு சதவீதம் இந்தத் தோலைச் சாப்பிட முடியும் என்கிறார்கள். இந்த வாழையை ‘உறைய வைத்து வளர்த்தல்’ என்ற முறையில் உருவாக்குகிறார்கள். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முறை. பனியுகம் முடிந்த பிறகு, தாவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் தோன்றிய தாவரங்களின் டிஎன்ஏவை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் தாவரங்களை உருவாக்கினார்கள். அதில் ஒன்று மோங்கே வாழை. அந்தக் காலத்தில் இந்த வாழை வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின. ஆனால் இன்றோ 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோங்கே வாழைப்பழம் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் ஒரு சிலரே வாங்கி, சுவைக்க முடிந்தது. காரணம் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க முடியவில்லை. இதன் உற்பத்தி மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு வாரத்துக்கு டி&டி பண்ணை 10 வாழைப்பழங்ளை மட்டுமே விளைவிக்கிறது. ஒரு பழத்தின் விலை சுமார் 362 ரூபாய்.

“வாழைப்பழம் பற்றிய கருத்துகளை அறிவதற்காக எங்களுக்குச் சில வாழைப் பழங்களைக் கொடுத்தனர். மற்ற வாழைப் பழங்களை விட மோங்கே மிகவும் சுவையானது. சாதாரண வாழைப் பழத்தில் 18.3 கிராம் சர்க்கரை இருக்கும், மோங்கேயில் 24.8 கிராம் சர்க்கரை இருக்கிறது. மணம் அதிகமாக இருக்கிறது. அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டுகிறது. மிகச் சரியாகப் பழுத்திருந்தால் மட்டுமே தோலையும் சேர்த்து உண்ண முடியும். சாதாரண வாழைப் பழங்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவதற்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் மோங்கேயில் பழுப்புப் புள்ளிகள் வந்த பிறகுதான் சாப்பிடமுடியும். மெல்லிய தோலாக இருப்பதால் பழத்துடன் சேர்த்து எளிதாக மென்று விழுங்கிவிட முடிகிறது. தோலின் சுவை கூட நன்றாக இருக்கிறது. வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. மிக முக்கியமாக செரடோனின் இருக்கிறது.

இது உடல் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தோன்றும் உணர்வுகளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால் ஆரோக்கியம் கருதி, தோலை அவசியம் சாப்பிட்டு விடலாம்” என்கிறது சோராநியூஸ் நிறுவனம்.

ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கே வாழை விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு இயற்கையான எதிரிகள் கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

இனி உரிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

36 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்