ட்ரம்ப் தனது வாழ்நாளில் பெரும் தவறை செய்துவிட்டார்: பாலஸ்தீனம்

By செய்திப்பிரிவு

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து ட்ரம்ப் தனது வாழ்நாளில் பெரும் தவறை செய்துவிட்டார் என்று பாலஸ்தீன விடுதலை இயக்க அமைப்புப் செயலாளர் சாப் எரட்காட் கூறியுள்ளார்..

கடந்த 1967-ல் மத்திய கிழக்கு போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதற்கு அரபு நாடுகள் பலத்த கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினரும், பாலஸ்தீன விடுதலை இயக்க அமைப்பு செயலாளருமான சாப் எரட்காட் "ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து ட்ரம்ப் தனது வாழ்நாளில் பெரும் தவறை செய்துவிட்டார். ட்ரம்பின் இந்த முடிவால் அமெரிக்கா இனி பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே சமாதான நடவடிக்கையில் அங்கம் பெற முடியாது" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்கியது பொறுப்பற்ற, நியாயமற்ற முடிவு என்று அமெரிக்காவை சவுதி விமர்சித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

57 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்