இந்திய, இலங்கை அரசுகளின் நிதியுதவியால் நனவாகும் மலையகத் தமிழரின் சொந்த வீடு கனவு

By மீரா ஸ்ரீனிவாசன்

இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் நிதியுதவியால் இலங்கை மலையகத் தமிழர்களின் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்டப் பணிக்காக தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் நுவரேலியா, புஸல்லாவ, மாத்தளை, கண்டி, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அடர்வனங்களைத் திருத்தி தேயிலைத் தோட்டங்களாக மாற்றினர். இலங்கை பொருளாதாரத்தை தூக்கிச் சுமந்த அவர்களின் வாழ்க்கை கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

மலையகத் தமிழர்கள் என்றழைக்கப்படும் அவர்களில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடு கூட இல்லை. இந்தப் பின்னணியில் இந்திய அரசு நிதியுதவியுடன் 14,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பயனாளிகளில் எஸ். இந்திரா காந்தியும் (33) ஒருவர். இலங்கையின் மத்திய மாகாணம், நுவரேலியா மாவட்டம், தயாகமா பகுதியில் இவரும் இவரது கணவர் விஜயகுமாரும் புதிய வீட்டின் இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.இந்திரா காந்தி கூறியபோது, “இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்தநாளில் நான் பிறந்ததால் எனக்கு அவரின் பெயரை சூட்டிவிட்டனர். எங்கள் மக்களுக்கு வீடு கட்டித் தரும் இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்களின் நலனுக்காக தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் விக்கிரம சிங்கவும் புதிய வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த 2016 முதல் 5 ஆண்டுகளில் மலையகத் தமிழர்களுக்காக 1.6 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அரசுத் தரப்பில் குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள கடன் தொகைக்கு 7.5 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு திட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் வீடுகள் கட்டுப்பட்டுள்ளன.

இதுகுறித்து செல்லியப்பன் கூறியபோது, தேயிலை எஸ்டேட்டில் 36 ஆண்டுகள் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வுபெற்று விட்டேன். அரசு திட்டத்தில் முதல்முறையாக சொந்த வீட்டை கட்டியுள்ளேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அரசின் ஆலோசகர் வாமதேவன் கூறியபோது, மலையகத் தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிறுவனங்கள் நிலங்களை வழங்க மறுத்து வருகின்றன. பிரதான சாலைக்கு அருகே நிலம் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.

பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மலையகத் தமிழர்களின் சொந்த வீடு கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கல்வி, சுகாதாரம், ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று மலையகத் தமிழர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்