வறுமையில் இருந்து மீள இயேசு படத்துக்குப் பதில் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் படத்தை வீட்டில் வைத்த கிறிஸ்தவர்கள்

By செய்திப்பிரிவு

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ளது யுகான் மாவட்டம். இங்குள்ள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். யுகான் பகுதி மிகவும் பின்தங்கி வறுமையில் தவிக்கிறது. இங்குள்ள கிறிஸ்தவர்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ஜி ஜின்பிங் (64) வரும் 2020-ம் ஆண்டுக்குள் சீனாவில் வறுமை ஒழிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்கான செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்ளூர் அரசு நிர்வாகமும் வறுமையை ஒழிக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி உள்ளது. ஆனால், ‘‘இயேசு உங்களை காப்பாற்ற மாட்டார். உங்கள் நோயை குணப்படுத்த மாட்டார். கம்யூனிஸ்ட் கட்சியும், அதிபர் ஜி ஜின்பிங்கும்தான் காப்பாற்றுவார்கள். இயேசு படத்தை எடுத்துவிட்டு அதிபர் படத்தை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறியதாகத் தெரிகிறது.

அதேபோல் யுகான் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் இயேசு படத்துக்குப் பதில் அதிபர் ஜி ஜின்பிங் படத்தை வைத்துள்ளனர். இத்தகவலை ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ வெளியிட்டுள்ளது. யுகான் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தங்கள் வீடுகளில் உள்ள இயேசுவின் உருவப்படத்தை அகற்றி உள்ளனர். அவர்களில் 453 பேர் அதிபர் ஜி ஜின்பிங் படத்தை வைத்துள்ளனர். சீனாவில் மாசே துங்கை கடவுளாக வழிபட்ட காலம் உண்டு. அதுபோல் இப்போது அதிபர் ஜி ஜின்பிங் செல்வாக்குள்ள தலைவராக உருவெடுத்துள்ளார் என்று கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்