ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர்: அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

By செய்திப்பிரிவு

லஷ்கர் இ - தொய்பா அமைப் பின் தலைவர் ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர் என்று அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள் ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சர்கோதாவைச் சேர்ந்த ஹபீஸ் சயீது 1970-களில் ஆப்கானிஸ்தான் சென்று அல்-காய்தா அமைப்பில் தீவிரவாத பயிற்சி பெற்றார். 1990-ல் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப் பைத் தொடங்கினார். தனது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட ஜமாத் உத் தவா என்ற பெயரில் அறக்கட்டளை அமைப்பைத் தொடங்கினார்.

சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீது வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். அதன்பின் அவரது வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரை விடுவிக்க லாகூர் உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, “ஹபீஸ் சயீது தீவிரவாத தலைவர் என்று ஐ.நா. சபையும் அமெரிக்காவும் ஏற்கெனவே அறிவித்துள்ளன. எங்கள் நிலையில் மாற்றமில்லை. அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

9 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

39 mins ago

கல்வி

34 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

49 mins ago

தொழில்நுட்பம்

55 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்