பல சரக்கு விற்பனையில் கால் பதிக்கும் அலிபாபா ஆன்லைன் விற்பனை நிறுவனம்

By செய்திப்பிரிவு

 

உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா, சீனாவில் நேரடியாக கடைகள் மூலம் பல சரக்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையிலும் களம் இறங்குகிறது.

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனமும் ஆன்லைன் வரத்தகத்தில் கொடிகட்டி பறக்கிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமாக விளங்கும் சன் ஆர்ட் ரீடைல் குழும நிறுவனத்தில், 19ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது அலிபாபா நிறுவனம் . இதுகுறித்து அலிபாபா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் ஷாங் கூறுகையில் ‘‘ஆன்லைன் வர்த்தகத்துடன் நேரடி வர்த்தகத்தையும் அதிகரிக்கும் பொருட்டே, புதிய வர்த்தகத்தில் இறங்கியுள்ளோம்’’ எனக்கூறினார்.

சன் ஆர்ட் நிறுவனம் பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யம் கடைகளை சீனா முழுவதும் நடத்தி வருகிறது.

இதன் மூலம் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி சில்லறை விற்பனையிலும், அலிபாபா நிறுவனம் இறங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்கம் அதிகரித்து வரும் போதிலும், சீனாவை பொறுத்தவரையில் கடைகளில் நடைபெறும் நேரடி விற்பனை 85 சதவீத அளவிற்கு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்