ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்பதா?- ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் கொதிப்பு

By செய்திப்பிரிவு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அண்மையில் கூறியதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் தோக்கீர் ஜிலானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரில் இது தொடர்பாக அவர் நேற்று கூறும்போது, “ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என எங்கே எழுதியுள்ளது? இவ்வாறு சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த முட்டாள் தனமான பிரச்சாரம் தேசிய மாநாடு கட்சி மற்றும் அவர்களின் கூலிகளால் மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் ஆகும் என எங்கள் வீட்டு கழிப்பறை கதவுகளில் கூட பாகிஸ்தானியர்கள் எழுதுகின்றனர். முட்டாள் தனத்துக்கும் ஓர் அளவு உண்டு. தொலைக்காட்சிகளில் எங்களை துரோகிகள் என பாகிஸ்தானியர்கள் கூறுகின்றனர். எவரும் வாங்காத அவர்களின் உப்பை கிலோ ரூ.20-க்கு நாங்கள் வாங்குகிறோம். எங்கள் பகுதி தண்ணீரை அவர்கள் குடிக்கின்றனர். காஷ்மீர் பிரிவினைவாத மூத்த தலைவர்களான மிர்வைஸ் பரூக், அப்துல் கனி லோனே ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பின்னால் பாகிஸ்தானின் சதி உள்ளது” என்றார்.

ஹுரியத் மாநாடு கட்சி மிதவாத பிரிவு தலைவராக இருந்த மிர்வைஸ் பரூக் 1990 மே 21-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு நாளில் மற்றொரு தலைவர் அப்துல் கனி லோனே, கடந்த 2002-ல் கொல்லப்பட்டார். - ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்