ஐநா அணு சக்தி மாநாட்டை புறக்கணித்தது ஈரான்

By செய்திப்பிரிவு

ஐ.நா. சபையின் அணு சக்தி மாநாட்டை ஈரான் புறக்கணித் தது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுத்து வருகிறார். எனினும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள், ஈரானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

இந்தப் பின்னணியில் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் யுகியோ அமோனோ அண்மையில் ஈரானுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியபோது, அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் அரசு உறுதியுடன் பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

இதே கருத்தை ஐ.நா. அணு சக்தி மாநாட்டிலும் யுகியோ அமோனோ பேச வேண்டும் என்று ஈரான் அரசு வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை யுகியோ ஏற்கமறுத்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் அரசு, அபுதாபியில் நேற்று நடந்த ஐ.நா. சபையின் அணு சக்தி மாநாட்டை புறக்கணித்தது.

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மட்டுமன்றி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக செயல்படுகின்றன.

இதனிடையே ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் பேசியபோது, ஈரானிய விஞ்ஞானிகள் அதிநவீன ஏவுகணை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து ஏவுகணை ஆராய்ச்சியை நிறுத்த முடியாது என்று தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 mins ago

தமிழகம்

58 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்