ஆக.18: இன்று என்ன? - நாட்டின் முதல் ஐஐடி

By செய்திப்பிரிவு

சென்னை, மும்பை, டெல்லி உள்பட 23 இடங்களில் ஐஐடி எனும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் தொடர்பான இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் முதலில் தொடங்கப்பட்டது மேற்கு வங்கம் காரக்பூரில் உள்ள ஐஐடி. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா தொழிற்துறையில் வளர்ச்சியடைய தேவையான சிறந்த பொறியாளர்களை உருவாக்க இந்நிறுவனம் நிறுவப்பட்டது.

அந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்ததால் அன்றைய மேற்கு வங்க முதல்வர் பிதான் சந்திர ராய் முதல் ஐஐடியை தொடங்குவதற்கான ஒப்புதலை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் பெற்றார்.

அதன்படி 1951-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி காரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்