ஜூலை 7: இன்று என்ன? - எம்.எஸ்.தோனி பிறந்தநாள்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், வெற்றிகரமான கேப்டன் என கிரிக்கெட்டில் உயர்ந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 2007 முதல் 2017-ம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் திறம்பட பணியாற்றினார்.

இவரது தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 2009-ல் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. எதற்கும் பதற்றமோ கோபமோ கொள்ளாமல் அமைதியான மனோபாவம் கொண்டுள்ளதால், ‘கேப்டன் கூல்’ என கிரிக்கெட் உலகம் கொண்டாடுகிறது.

மத்திய அரசு அவருக்கு 2009-ல் பத்மஸ்ரீ விருதையும், 2018-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கவுரவித்தது. இவரது வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்