டிங்குவிடம் கேளுங்கள் 15 - திசைகாட்டி உணர்வுடைய பறவை தெரியுமா?

By செய்திப்பிரிவு

புறா எப்படித் தகவலைக் கொடுத்துவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சரியாக வந்து சேர்கிறது, டிங்கு?

- சி. நிர்மல் குமார், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.

Homing Pigeon என்று அழைக்கப்படும் புறாக்களைத்தான் மனிதர்கள் வளர்க்கிறார்கள். இந்தப் புறாக்களுக்குப் பயிற்சி கொடுத்து, செய்தி அனுப்புவதற்கும், உலகப் போர்கள், பந்தயங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தி வந்தனர்.

அறிமுகம் இல்லாதஓர் இடத்திலிருந்து தான் வசிக்கும் இடத்துக்கு மிகச் சரியாக இந்தப் புறாக்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. புறா தான் செல்லும் வழியை வரைபடமாக உணர்ந்துகொள்கிறது. திசைகாட்டி உணர்வும் இருக்கிறது. தலையில் உள்ள காந்தத் திசுக்களை வைத்து, பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து வழியைக் கண்டுகொள்கிறது. ஒளியை வைத்துச் செல்கிறது. அகவொலி வரைபடம் மூலம் வழியைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்கள் கற்றுக்கொண்டுதான் வழியை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், புறாக்களுக்கு மரபணுவிலேயே இந்தத் தகவல் இருக்கிறது என்றெல்லாம் சொல்லப் படுகின்றன.

ஆனால், இந்தக் காரணத்தால் தான் சரியான இடத்துக்குத் திரும்பிவருகிறது என்று உறுதியாக இதுவரை சொல்ல முடியவில்லை. இதுபற்றி இன்றும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலே சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட காரணங்களைப் பயன்படுத்தி புறா வழியைக் கண்டுபிடிக்கிறது என்றமுடிவுக்கு வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் சரியான காரணத் தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவோம், நிர்மல் குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்